இன்றுமுதல் நடைமுறைக்கு வரகின்றது புதிய ஊழல் தடுப்புச் சட்டமூலத்தின் விதிகள்!

இலங்கையில் புதிய ஊழல் தடுப்புச் சட்டமூலத்தின் விதிகள் இன்று (15.09) முதல் அமுல்படுத்தப்பட உள்ளன.
இது தொடர்பான அசாதாரண வர்த்தமானி அறிவித்தல் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் கடந்த 9ஆம் திகதி வெளியிடப்பட்டது.
அதன்படி இன்றுமுதல் இந்த சட்டம் தொடர்பான விதிகள் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல் தடுப்பு மசோதா கடந்த ஜூலை 19 ஆம் திதகி நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
குற்றச் செயல்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் சட்டத்தின் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வெள்ளவத்தையில் கடும் மோதல் - பொலிஸார் உட்பட பலர் காயம்!
வடக்கில் மேலும் 13 பேருக்கு கொவிட்-19 தொற்று: மருத்துவர் கேதீஸ்வரன்!
தொடர்ந்து ஒரு குழுவினரின் தாக்குதலுக்கு உள்ளாகும் வட்டுக்கோட்டை பகுதி மக்கள் – நீதி கோரி போராட்டம்!!
|
|