இன்றுமுதல் ஞாயிறு வரை மின் தடை அமுலாகும் காலம் தொடர்பான அறிவிப்பு!
Friday, June 24th, 2022
இன்றுமுதல் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை நாடளாவிய ரீதியில் மின்தடை அமுலாக்கப்படும் காலம் தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி, இன்றையதினம், மதியம் 12 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில் இரண்டரை மணிநேரம் மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
நாளை முற்பகல் 9.30 முதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில் இரண்டரை மணிநேரம் மின் துண்டிக்கப்படவுள்ளது.
நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேரம் மின்தடையை அமுலாக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுவிஸிலிருந்து நிதி - செல்வபுரத்தில் வாள்வெட்டு – யாழ்ப்பாணத்தில் 6 பேர் கைது!
மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது உள்ளிட்ட ஆலோசனைகள் அடங்கிய விசேட சுற்றுநிருபம் ...
கடனை செலுத்தாத கடனாளிகளின் சொத்துக்களை வங்கிகளால் பறிமுதல் செய்வதை டிசம்பர் 15 ஆம் திகதி வரை இடைநிறு...
|
|
|


