இனி வாகன கொள்வனவு இல்லை – நிதியமைச்சர்!

Tuesday, November 22nd, 2016

அரச நிறுவனங்கள், அமைச்சுகள் திணைக்களங்கள் போன்றவற்றிற்கு புதிய வாகனக் கொள்வனவுகள் எதுவும் இனிவரும் காலங்களில் இடம்பெறாது எனவும் வாகனங்கள் தேவைப்படும் பட்சத்தில்  குத்தகைக்கு கொடுப்பதற்கு அரசு முடிவெடுத்துள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் திணைக்களத்தில் ஆரம்பிக்கும் இப்புதிய நடவடிக்கைகள், 2017இலிருந்து ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வாகனங்களைப் புதிதாக வாங்குதல் , காப்புறுதிக் கட்டணம் செலுத்துதல், வாகனங்களின் திருத்த வேலையை மேற்கொள்ளுதல் மற்றும் அவற்றைப் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்க ஏற்படும் பாரிய செலவீனங்கள் போன்றவற்றைக்  குறைக்கவே இந்த ஏற்பாடென அவர் குறிப்பிட்டார்.வாகனங்களின் விநியோகம் ஏல அடிப்படையில் தெரிவு செய்யப்படும் தனியார் நிறுவனங்கள் ஊடாகவே மேற்கொள்ளப்படும்.

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் தேவைப்படும் வாகனங்களுக்கும், அம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் போன்ற விசேட வாகனங்களுக்கும் மாத்திரமே இத்திட்டம் விதிவிலக்காக இருக்குமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

06-6-1

Related posts: