6 ஆம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!
Saturday, May 31st, 2025
2025 ஆம் ஆண்டு 6 ஆம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டு 6 ஆம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான முதல் சுற்று மேன்முறையீட்டு பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேன்முறையீடு மூலம் பாடசாலைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை உள்வாங்குவது தொடர்பான விடயங்கள், சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபரால் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
000
Related posts:
பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து தயக்கமின்றி முறையிடவும் - யாழ்.அரச அதிபர் தெரிவிப்பு!
யாழ். நகரில் கண்டன ஆர்ப்பாட்டம்!
தகுதி பெற்று, வங்கிக் கணக்கைத் திறக்காதவர்களை கணக்குகளை விரைவில் திறக்குமாறு அறிவுறுத்து!
|
|
|


