பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து தயக்கமின்றி முறையிடவும் – யாழ்.அரச அதிபர் தெரிவிப்பு!

Wednesday, December 14th, 2016

பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பில் தயக்கமின்றி யாராகவிருந்தாலும் முறையிட முடியும் என யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். பெண்கள் மீதான வன்முறைக்கெதிரான வாரத்தினை முன்னிட்டு யாழில் அண்மையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எமது சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை குறிக்கப்பட்ட சில காலத்துக்கு பின்னர் கூடுதலாக அதிகரித்துள்ளமை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. சில கட்டுப்பாடுகளுக்குள் இருந்து தீடீரென சுதந்திரமான நிலை வரும் போது இவ்வாறான வன்முறைச்சம்பவங்கள் அதிகரிக்கின்றன. தற்போது பாடசாலை, தனியார் கல்வி நிலையங்களுக்குக்கூடி மாணவிகள் தனியாகச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறை எல்லா மாவட்டத்திலும் உள்ளது. ஆனால் எமது மாவட்டத்தில் இது மிக முக்கியமான ஒரு பிரச்சினையாகவுள்ளது. யழ்.மாவட்ட செயலகத்தில் பெண்கள் அபிவிருத்தி பிரிவு 3 வருட காலமாக இயங்கி வருகின்றது. அதேபோன்று பொலிஸ் நிலையங்களிலும் மகளிர் பிரிவு இயங்கி வருகின்றது, வன்முறையால் பாதிக்கப்படுகின்றவர்கள் தயக்கமின்றி முறைப்பாடுகளைப் பதிவு செய்ய முன்வரவேண்டும். வன்முறை தொடர்பான முறைப்பாடுகளை செய்வதால் சமூகத்தில் வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என சிலர் நினைக்கின்றனர். அதன் காரணமாக முறைப்பாடுகள் அதிகளவில் பதிவு செய்யப்படுவதில்லை.

உண்மையான நிலைப்பாடுகளை வெளிக்கொண்டு வராமல் விடுவதால் குற்றவாளிகள் தண்டிக்கப்படால் இருப்பதுடன் வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்துச் செல்கின்றது. எனவே இது தொடர்பில் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு அவசியம். சிறு பிரச்சினைகள் என்றாலும் அவற்றைக் கூடுதலான முறையில் வெளிக்கொண்டு வந்தால் நடவடிக்கை எடுக்க முடியும். பெண்களுக்கு எதிராக குடும்ப வன்முறை மற்றும் வெளி இடங்கள், அலுவலகங்கள் என்பவற்றில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுகிறது.

எமது மாவட்டத்தை பாலியல் ரீதியான பிரச்சினை இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பல்வேறு செயற்பாடுகள் நடைபெறுகின்றன. பால்நிலை சமத்துவம் தொடர்பான விழிப்புணர்வுகளை அலுவலகம், பாடசாலைகள், கிராம மட்டத்திலும் செய்ய வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

vetanajakang987488956

Related posts:

இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்படுகின்ற அனைத்து பரீட்சைகளும் விரைவில் டிஜிட்டல் மயமாகும...
எரிபொருள் இல்லையென எவராவது சொன்னால் அது அப்பட்டமான பொய்யாகும் - அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவிப்ப...
வன்முறையில் ஈடுபட வேண்டாம் - ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நாமல் ராஜபக்ஷ விடுத்த முக்கிய கோரிக்கை!