இனவாதத்தை தூண்டுபவர்கள் பௌத்த துறவிகள் அல்ல – சந்திரிகா

Tuesday, June 13th, 2017

 

இனவாதத்தை தூண்டும் மதவாத அடிப்படையில் செயற்படும் காவியுடை தரித்தவர்களை நான் பௌத்த பிக்குகள் என அழைப்பதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்  உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் அவர் ’காவியுடை அணிந்த சிலர் இருக்கின்றார்கள். அவர்கள் இனவாத மதவாத அடிப்படையிலேயே செயற்படுகின்றார்கள். அவ்வாறான நபர்களை நான் பௌத்த பிக்குகள் என கூறுவதில்லை.

காவி உடை தரித்தால் கௌதம புத்தரின் கொள்கைகளை பின்பற்றி அதன் வழி நடக்க வேண்டும் அதனை எமக்கு சொல்லி கொடுக்க வேண்டும். எனினும் சில பௌத்த பிக்குகள் கொலை செய்யவும், பொறமை கொள்ளவும் குரோத உணர்வுடன் வாழவும் கற்றுக்கொடுக்கின்றார்கள்.

ஒருசில பௌத்த பிக்குகள் மதக் கொள்கைகளுக்கு முற்றிலும் புறம்பான காரியங்களை செய்கின்றார்கள். யாழ்ப்பாணத்திலும் இவ்வாறான கடும்போக்காளர்கள் இருந்தார்கள் இதனால் யாழ்ப்பாண மக்களுக்கு அழிவுகள் ஏற்பட்டன.

இனவாத அடிப்படையில் போர் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் மதவாத அடிப்படையில் செயற்பட சிலர் முயற்சிக்கின்றார்கள் ’என  தெரிவித்துள்ளார்.

Related posts: