இனவாதக் கருத்துகளை ஆராய்வதற்கு விசேட குழு!

Monday, November 28th, 2016

இனவாதக் கருத்துகளை வெளியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. தேசிய நல்லிணக்கத்திற்கு குந்நதகம் ஏற்படுத்தக்கூடிய கடும் போக்குடைய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக இந்த குழுவினை அரசாங்கம் நியமிக்கவுள்ளது.

இது தொடர்பிலான சட்டவரைபு ஒன்றை உருவாக்குவதே இந்த குழுவின் பிரதான நோக்கமாகும். இதற்கென 3 ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமிக்கப்படவுள்ளனர். இந்தக் குழுவினை உருவாக்குவது குறித்து ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. நல்லிணக்க முனைப்புக்களுக்கு அண்மைக்காலமாக ஏற்படுத்தப்பட்டு வரும் தடைகளைக் களையும் நோக்கில் இந்தக்குழு நியமிக்கப்படவுள்ளது. அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் இனவாத தூண்டுதல்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.500.560.350.160.300.053.800.900.160.90

Related posts: