யாழ் மாவட்டத்தில் விதை நெல் சேமிப்புக் களஞ்சியம் அமைப்பதற்கு ரூ.20 மில்லியன்!

Saturday, June 9th, 2018

யாழ்ப்பாண மாவட்டத்தில் விதை நெல் சேமிப்புக் களஞ்சியம் அமைப்பதற்கு 20 மில்லியன் ரூபா நிதியை விவசாய அமைச்சு வழங்க முன்வந்துள்ளதாக மாவட்ட செயலக விவசாயப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:

விதை நெல் சேமிக்கப்பட்டு உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதன் மூலமே செற்செய்கை சிறப்பாக நடைபெறும். யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள திருநெல்வேலி களஞ்சியத்தில் குறிப்பிட்ட அளவே நெல்லை சேமிக்க முடியும். பருவகாலம் மாற்றம், விதைத்தல் காலம் என்பவற்றை அறிந்து விதை நெல் வழங்கப்படல் வேண்டும். ஆகவே அதிக புசல் நெல்லை சேமிக்க வேண்டிய தேவை உள்ளது.

இதனை அடிப்படையாக கொண்டு விவசாய அமைச்சுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனடிப்படையில் தற்போது களஞ்சியம் அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

20 மில்லியன் ரூபா செலவில் சாவகச்சேரி பிரதேசத்தில் இந்த விதை நெல் சேமிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது.

இதன் மூலம் 8 ஆயிரம் புசல் நெல் விதைகளை சேமிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: