இந்த வருடத்தில் 52 அரச நிறுவனங்களின் மொத்த இழப்பு 1,100 பில்லியன் ரூபாவாக உயரும் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அதிர்ச்சித் தகவல்!
Saturday, April 29th, 2023
இந்த வருடத்தில் 52 அரச நிறுவனங்களின் மொத்த இழப்பு 1,100 பில்லியன் ரூபாவாக உயரும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் மற்றும் இலக்குகளை விரைவாக பூர்த்தி செய்ய வேண்டிய தேவை இருப்பதாக குறிப்பிட்டார்.
இவ்வருடத்தின் முதல் 3 மாதங்களில் வெளிநாட்டுப் பணம் பெறுவது 80 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.அதன்படி இறக்குமதிச் செலவும் 37 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, வெளிநாட்டில் இருந்து தொழில் நிமித்தம் நாடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மேலதிக கட்டணச் சலுகைகளை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, 600 அமெரிக்க டாலர்கள் முதல் 4,800 அமெரிக்க டாலர்கள் வரையிலான கூடுதல் பணிக்கொடைக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


