இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு இரத்து?

2018 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட மாட்டாது என சுவீடன் நோபல் பரிசு குழு அறிவித்துள்ளது.
இந்தக் குழுவிலுள்ள உறுப்பினர் ஒருவரின் கணவர் மீது பாலியல் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டதனை அடுத்தே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த புகார் காரணமாக தம் மீதான நம்பிக்கையினை மக்கள் இழந்துள்ளதாக சுவீடன் நோபல் பரிசு குழுவினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இரண்டாவது உலக மகா யுத்தம் காரணமாக 1940 ஆம் ஆண்டு முதல் 1943 ஆம் வரையிலான காலப்பகுதியில் நோபல் பரிசு வழங்கப்படாமல் இருந்தது. அதற்கு பின்னர் இந்தஆண்டில் நோபல் பரிசு விருது வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
150ஆவது வருட சேவையை பூர்த்தி செய்யும் இலங்கை பொலிஸ் !
அர்ஜுன் அலோஸியஸுக்கு ஒரு மாதத்தில் 35 கோடி ரூபா லாப பங்கு!
ஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம் !
|
|
சீரற்ற காலநிலை - மன்னாரில் 319 குடும்பங்களைச் சேர்ந்த 1146 பேர் பாதிப்பு - மாவட்ட அனர்த்த முகாமைத்து...
மக்கள் எதிர்பார்க்கின்ற அமைப்பு மாற்றத்தை அறிமுகப்படுத்துவதற்கான இது பொருத்தமான தருணம்- இளைஞர்கள் ஆத...
QR குறியீட்டுடன் புதிய சாரதி அனுமதி அட்டை - புள்ளிகளை குறைக்கவும் நடவடிக்கை - ஆணையாளர் நாயகம் தெரிவி...