இந்த ஆண்டின் இறுதி சந்திரகிரகணம் நாளை!

இந்த ஆண்டிற்கான இறுதி சந்திரகிரகணம் நாளையதினம் பகுதியளவில் தென்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வுப் பிரிவு அறிவித்துள்ளது.
அத்துடன் அடுத்த சந்திரகிரகணம் 2021 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதியே இலங்கையர்களுக்கு தென்படும் எனவும் ஆய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அந்தவகையில் நாளை நள்ளிரவிற்கு பின்னர், 17 ஆம் திகதி அதிகாலை 12.13 இற்கு சந்திரகிரகணம் ஆரம்பமாகி 17ஆம் திகதி அதிகாலை 5.47 அளவில் சந்திர கிரகணம் நிறைவுபெறவுள்ளது.
இந்த சந்திர கிரகணம் இலங்கை, அவுஸ்ரேலியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில நாடுகளில் தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெளிநாடுகளின் பூகோள அரசியல் தேவைக்காக நாட்டின் இறையாண்மையை காட்டிக்கொடுக்க நான் தயாரில்லை - ஜனாதிபத...
அராலியில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்- முச்சக்கரவண்டி தீயிட்டு எரிப்பு!
பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான நிலைமை காரணமாக காற்றும் மழையுடனுமான வானிலை அதிகரித்துக் காணப்படும் - ளி...
|
|