இந்தோனேஷியா சென்ற ஜனாதிபதிக்கு சிறப்பு வரவேற்பு..!

Monday, March 6th, 2017

 

இந்து சமுத்திர பிராந்தியத்தின் அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தோனேசியாவிற்கு  விஜயம் மேற்கொண்டு  ஜகர்த்தாவில் உள்ள Soekarno Hatta சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபாலவுக்க சிறப்பான  வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியா அரசின் சார்பாக அந்நாட்டின் மக்கள் விவகாரம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் Basuki Hadimuljono மற்றும் விசேட தூதுக்குழுவினர் ஜனாதிபதிக்கு மாலை அணிவித்து கோலாகலமாக வரவேற்றனர்.

அத்துடன் ஐ.நா கூட்ட தொடர்களை முடித்துக்கொண்டு இந்தோனேஷியா சென்றுள்ள அமைச்சர் மங்கள சமரவீர, இராஜாங்க அமைச்சர் வீ.எஸ்.இராதாகிருஷ்ணன், பிரதி அமைச்சர்களான சுஜீவ சேனசிங்க, திலீப் வெதஆரச்சி உள்ளிட்டோர் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts: