இந்தோனேசியாவில் 10 ஆவது உலக நீர் உச்சி மாநாடு – உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பயணிக்கின்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!
Thursday, May 16th, 2024
இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 10 ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.
இதன்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை அந்த நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஜ.எஸ் தீவிரவாதளால் இலங்கைப் பொருளாதாரத்தில் ஆபத்து ?
தேசிய அடையாள அட்டை விநியோகம் ஆரம்பம்!
கடலட்டைப் பண்ணை எமக்கு வேண்டும் – யாழ்ப்பாணத்தில் மக்கள் ஒன்றுதிரண்டு போராட்டம்!
|
|
|


