இந்திய மீன்பிடி படகுகளை ஏலத்தில் விடுவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கடற்றொழில் அமைச்சிடம் கடற்படை கோரிக்கை.!

இலங்கை கடற்பரப்பிற்குள் வைத்து இந்திய மீனவர்களுடன் கையகப்படுத்தப்பட்ட மீன் பிடி படகுகளை ஏலத்தில் விடுவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கடற்படை மீன்பிடி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய சட்டரீதியான நடவடிக்கைகளை நிறைவு செய்த 140 படகுகளை குறித்த நடவடிக்கைக்கு உட்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மீனவ படகுகளானது கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கடந்த 2018 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மேலும் 62 மீனவ படகுகள் கடற்படையினர் வசம் காணப்படுவதாகவும் அதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
முன்பதாக இலங்கை கடற்பரப்பிற்குள் மன்னார் மாவட்ட எல்லை மற்றும் ஊர்காவற்துறை எல்லைப் பரப்பிற்குள் ஊடுருவிய சமயம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு மாவட்ட நீரியல் வளத் திணைக்களம் ஊடாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட படகுகளில் ஊர்காவற்துறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட 94 படகுகளும் மன்னார் மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட 27 படகுகளையும் அழிப்பதற்கு அல்லது ஏலத்தில் விடுவதற்கான அனுமதியினை இரு நீதிமன்றங்களும் வழங்குயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|