இந்திய மீனவர்கள் 15 பேரினதும் விளக்கமறியல் யாழ்.ஊர்காவற்துறை நீதிமன்றத்தால் நீடிப்பு !
Saturday, December 10th, 2016
இலங்கையின் நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடித்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 15 பேரினதும் விளக்கமறியலை எதிர்வரும்-14 நாட்களுக்கு யாழ்.ஊர்காவற்துறை நீதிமன்றத்தால் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் இரு வேறு தினங்களில் யாழ்.நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச் சாட்டில் 15 மீனவர்களை கடற்படையினர் கைது செய்து யாழ். நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதனையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறான நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை(09) குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது 15 மீனவர்களையும் எதிர்வரும்-14 நாட்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை பதில் நீதவான் ஆர்.சபேசன் உத்தரவு பிறப்பித்தார்.

Related posts:
சோமவங்ச அமரசிங்க காலாமானார்!
தேர்தலை நடத்துவதில் தவறில்லை - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிப்பு!
இன்றுமுதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணிகள் ஆரம்பம் – கல்முனை மாநகர சபை...
|
|
|


