இந்திய மீனவர்களுக்கு அழைப்பு இலங்கை அழைப்பு!

Thursday, March 9th, 2017

இலங்கை மற்றும் இந்திய சிறைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்க இருநாட்டு அரசுகளும் பரஸ்பரம் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ராமேஸ்வரம் மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின் இந்தியா, இலங்கை நாடுகளின் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.இதன்படி, இருநாட்டு சிறைகளில் உள்ள மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, கச்சத்தீவில் நடைபெறும் ஆலய விழாவிற்கு வருகை தருமாறு இந்திய மீனவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா மார்ச் – 11, 12 ஆகிய இருநாட்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அத்திருவிழாவில் கலந்து கொள்ளுமாறு அமைச்சர் ஹர்ஷ டி சில்வா அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று முந்தினம் தமிழக மீனவர் ஒருவர் நடுக்கடலில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். எனினும் அந்த சம்பவத்திற்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என கடற்படை மறுத்திருந்தார்.

இதேவேளை, இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய அதிகாரிகளுக்கு உறுதி வழங்கியிருந்தார்.இந்திய அரசாங்கம் முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு தாம் ஒத்துழைப்பதாகவும் இலங்கை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கச்சதீவு அந்தோனியார் கோவிலின் திருவிழா வரவிருக்கிறது. இதற்கு தமிழக மீனவர்களை வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ள அமைச்சர், துப்பாக்கிச்சூடு சம்பவம் கச்சத்தீவு ஆலய விழாவை எந்தவிதத்திலும் பாதிக்காது.

இருநாட்டு மீனவ பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பது அவசியம். திருவிழாவை சிறப்பாக நடத்த இலங்கை கடற்படையினர் ஒத்துழைப்பு தருவார்கள்.

துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என கடற்படை கூறுகிறது. பிழை ஏற்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு தயாராக உள்ளது. தமிழக மீனவர் சுடப்பட்டது தொடர்பாக முழு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஏப்ரலில் நடக்கும் இருநாட்டு பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படும் என நம்பிக்கை உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: