இந்திய மக்களவைத் தேர்தல் – பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஜனாதிபதி வாழ்த்து!

Wednesday, June 5th, 2024

இந்திய மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகளிற்கு அமைய நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் ஏற்பட்ட முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் மீதான இந்திய மக்களின் நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவில் தொடர்ச்சியான வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: