விதை உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்தில் நியாயமான விலைக்கு விதை நெல் பெறலாம் – யாழ் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் !

Wednesday, October 10th, 2018

யாழ் மாவட்ட விவசாயிகள் தங்களுக்குத் தேவையான விதை நெல்லை யாழ்ப்பாண மாவட்ட விதை உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தில் நியாய விலைக்கு கொள்வனவு செய்து பயன்படுத்தலாம் என யாழ்ப்பாண மாவட்ட விவசாயப் பணிப்பாளர் திருமதி அஞ்சனாதேவி ஸ்ரீரங்கன் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட விவசாயிகளுக்கான விதை நெல் தொடர்பாகப் பணிப்பாளர் மேலும் தெரிவித்ததாவது:

யாழ் மாவட்ட விவசாயிகளின் நெல் உற்பத்தியைக் கருத்தில்கொண்டு யாழ் மாவட்டத்துக்கு ஏற்புடையதும் நல்ல விளைச்சலைத் தரக்கூடியதுமான விதை நெல் யாழ்ப்பாண மாவட்ட விதை உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்தால் நியாயமான விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எனவே விவசாயிகள் யாழ் மாவட்ட  விவசாயத் திணைக்களத்துக்கு அருகில் அமைந்துள்ள விதை உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்க விற்பனை நிலையத்தில் விதை நெல்லைக் கொள்வனவு செய்து பயன்படுத்தலாம் என்றார்.

Related posts:


இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு விரைவில் புதிய வரி முறைமை அறிமுகப்படுத்தும் - சுற்றுச்சூழ...
நீதிபதிகளின் அறிவு மற்றும் திறன்களை அதிகரிப்பதற்காக நீதித்துறை பயிற்சி கல்லூரியை நிறுவுவதற்கு அமைச்ச...
அரசியல் காரணிகளுக்காக நாம் ஒருபோதும் தேர்தல்களை ஒத்தி வைக்கப் போவதில்லை - அமைச்சர் நாமல் தெரிவிப்பு!