இந்திய பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ !
Friday, March 18th, 2022
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றிருந்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த 15 ஆம் திகதி பிற்பகல் இந்திய தலைநகர் டெல்லி நோக்கிப் பயணமாகியிருந்தார்.
நிதியமைச்சருடன் அவரது பாரியார், நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோரும் இந்தியாவுக்கு சென்றிருந்தனர்.
இதன்போது நிதியமைச்சர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஸ் வர்தன் ஷ்ரிங்லா, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவர் புது டெல்லியில் இருந்து இன்று மதியம் 1.40 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
நிதியமைச்சரின் இந்திய பயணத்தின் போது, இந்திய அரசாங்கத்திடம் இருந்து 1.9 பில்லியன் டொலர் கடனுதவியை பெறுவதற்கான இணக்கத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


