இந்திய தூதரக சேவைகள் தொடர்பில் கலந்துரையாடல்
Thursday, May 4th, 2017
இலங்கையிலுள்ள இந்தியர்கள் தொடர்பில் சேவைகளை வெளிப்படையானதாகவும் காத்திரமானமுறையிலும் முன்னெடுப்பது தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய பகிரங்க கலந்துரையாடல் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளது.
கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில் எதிர்வரும் 5ஆம் திகதி இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.கொழும்பு 3 காலிவீதி இலக்கம் 36-38 இலக்க கட்டடத்தில் இந்திய தூதரகத்தில் விசா மண்டபத்தில் அன்றையதினம் பிற்பகல் 3 மணிமுதல் 4 மணிவரை இடம்பெறவுள்ளது.
விசா கடவுச்சீட்டு ஓசிஐ உள்ளிட்டவை தொடர்பிலான பிரச்சினைகள் மற்றும் தூதரக சேவைகள் தொடர்பிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.இலங்கைக்கான பிரதி இந்திய தூதுவர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் பங்குகொள்ளமுடியும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
Related posts:
அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!
பாடசாலைகள் தனிமைப்படுத்தல் முகாம்களாக ஒருபோதும் மாற்றப்படமாட்டாது - படையினரை தங்க வைக்கவே சில பாடசா...
சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட உடன்பாடு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் எட்டப்படும் – கோட்டாபய ராஜபக்ச ...
|
|
|


