இந்திய ஒயில் நிறுவனத்துடனான உடன்படிக்கை செல்லுபடியற்றது – கோப் குழு பரிந்துரை!
Monday, February 6th, 2017
திருகோணமலையிலுள்ள எண்ணெய்த் தாங்கிகளை இந்திய ஒயில் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் உடன்படிக்கை செல்லுபடியற்றது என்பதால் அவற்றை மீளப்பெறமாறு கோப் குழு பரிந்துரைத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் அறிக்கையொன்று கோரப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
அவர் மேலம் தெரிவித்துள்ளதாவது.
எண்ணெய்த் தாங்கிகளை இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்கும் உடன்படிக்கை 2003ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது. இதன்போது 6 மாதங்களுக்குள் வரி உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டது. அவ்வாறானதொரு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டவில்லை இந்திய நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்ட எண்ணெய் தாங்கிகளுக்கான குத்தகை உடன்படிக்கை செல்லுபடியற்றது – என்றார்.

Related posts:
பௌத்தத்திற்கு முன்னுரிமை - பிரதமர்!
எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!
5000 ரூபா கொடுப்பனவுப் பணிகள் பூர்த்தி - காத்திருப்பு பட்டியலில் இல்லாதவர்களுக்கும் வழங்குவது குறித்...
|
|
|


