இந்திய – இலங்கை கடல்சார் 10ஆவது பயிற்சி நாளை!

Sunday, April 2nd, 2023

இந்திய – இலங்கை இருதரப்பு கடல்சார் 10ஆவது பயிற்சி நாளை செவ்வாயன்று கொழும்பில் இடம்பெறவுள்ளது.

குறித்த கடல்சார் பயிற்சி, துறைமுகம் மற்றும் கடல் என்ற இரண்டு கட்டங்களாக, இரண்டு நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையை ஐஎன்எஸ் கில்தான் மற்றும் ஐஎன்எஸ் சாவித்ரி என்பன பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

அதேவேளையில் இலங்கை கடற்படையை விஜயபாகு மற்றும் சமுதுர ஆகிய கப்பல்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

அத்துடன், இந்திய கடற்படை சேடக் உலங்குவானூர்தி மற்றும் டோர்னியர் கடல் ரோந்து விமானம் மற்றும் இலங்கை விமானப்படையின் டோர்னியர் மற்றும் பெல் 412 உலங்குவானூர்திகளும் இந்த பயிற்சியில் பங்கேற்கும். இந்தப் பயிற்சியில் இரு கடற்படைகளின் சிறப்புப் படைகளும் இணைந்து பங்கேற்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

கடல் கட்ட பயிற்சிகளில், வான் எதிர்ப்பு துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சிகள், கடல்சார் மதிப்பீடுகள், உலங்கு வானூர்தி மற்றும் கடல் ரோந்து விமான நடவடிக்கைகள், முன்கூட்டிய தந்திரோபாய சூழ்ச்சிகள், தேடுதல் மற்றும் மீட்பு மற்றும் கடலில் சிறப்புப் படை நடவடிக்கைகள் போன்றவை அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

ஒரு இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு : எதிர்வரும் 31ஆம் திகதிமுதல் பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளத...
சமூக வலைதளங்கள் மற்றும் சைபர் செயற்பாடுகளை கட்டப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - ஜனாதிப...
கோட்டாபய ராஜபக்ஷ வெளியேறியதில் இந்தியாவுக்கு எந்த பங்கும் கிடையாது - இந்திய வெளியுறவு பேச்சாளர் அரிந...