இந்தியா – இலங்கை இடையே எண்ணெய் குழாய் அமைப்பது தொடர்பில் இரு நாடுகளின் அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடல்!

Thursday, July 13th, 2023

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு எண்ணெய் குழாய் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சந்திப்பு ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் நேற்றையதினம் (12.07) இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்ததுடன் குறித்த விடயம் தொடர்பிலும் விரிவாக ஆராய்ந்துள்ளனர்.

இந்த நாட்டில் எரிபொருள் விநியோகத்தை விரைவுபடுத்துவதும், மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்டபிடத்தக்கது.

Related posts:


சீதனக் கொடுமை வடக்கில் அதிகம் - இல்லாதொழிக்க சட்டம் வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்சினி வலியு...
இரட்டைக் குடியுரிமையுடைய எம்.பி. நாடாளுமன்றத்தில் இருக்கின்றாரா? - நிச்சயம் ஆராய்ந்து நடவடிக்கை எடு...
அரசினால் வழங்கப்படும் தொழிற்சார் கற்கை நெறிகளை கற்பதற்கான ஆர்வம் குறைந்து காணப்படுகின்றது - மாகாண பண...