இந்தியாவுடன் புதிய ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி!
Tuesday, March 22nd, 2022
இலங்கையில் சமுத்திர மீட்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு நிலையத்தை நிறுவுவதற்கு, இந்திய அரசாங்கத்திடம் இருந்து உதவித் தொகையினை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
குறித்த ஒருங்கிணைப்பு நிலையத்தை நிறுவுவதற்கு 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, அதனை நிறுவுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கும், இந்தியாவின் பாரத் இலக்ட்ரோனிக்ஸ் நிறுவனத்திற்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீளவும் யுத்தத்தை ஏற்படுத்த இனவாத சக்திகள் முயற்சி!
ஊர்காவற்றுறையில் ஆதனவரி மதிப்பீடுகள்
இலங்கையின் அபிவிருத்திக்கு கைகொடுப்பதாக உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவிப்பு!
|
|
|


