இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை பரந்த அபிவிருத்தி பிரதேசமாக மாற்றப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!
Friday, September 13th, 2024
திருகோணமலை பிரதேசத்தை இந்தியாவுடன் இணைந்து பரந்த அபிவிருத்தி பிரதேசமாக மாற்ற உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அம்பாறை சாய்ந்தமருதில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“இலங்கைக்கு வருகின்ற சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை 25 இலட்சத்திலிருந்து 50 இலட்சமாக நாம் மாற்றவுள்ளோம்.
அவர்களிடம் இருந்து நாளொன்றுக்கு 400 டொலர்களை அறவிடுவோம். பருத்தித்துறை தொடக்கம் பானம வரையான பிரதேசத்தை பாரிய சுற்றுலாத்தளமாக மாற்றுவோம். அத்துடன், 3 விமான நிலையங்களையும் அபிவிருத்தி செய்யவுள்ளோம்.
மேலும், அம்பாறை பிரதேசத்தில் ஒரு முதலீட்டு வலயத்தை உருவாக்கவுள்ளோம். இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை பிரதேசத்தையும் முன்னேற்றுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
வரும் 3 நாட்களுக்கு சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துமாறு வேண்டுகோள்!
பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு பதிலாக புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் – அமைச்சர் கெஹெல...
விலங்கு தீவனத்துக்கும் பியர் தயாரிப்புக்களுக்கும் அரிசி பயன்படுத்துவதை இடைநிறுத்துமாறு விவசாயத்துறை ...
|
|
|
மீண்டும் தாயகம் எங்கும் போராட்டம் வெடிக்கும் என்று கூறியது இதுதானா - வலி.வடக்கு மக்கள் ஆதங்கம்!
இலங்கை – ரஷ்யா இடையில் விளையாட்டுத்துறையில் பங்களிப்புக்களைபலப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் நாமலின் ...
2 ரூபா கொடுப்பனவுக்கு தகுதியானவர்கள் மேல் முறையீடு செய்யலாம் - அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ...


