இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பாவனைக்குதவாத 69,525 Kg அரிசி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது!
Monday, December 11th, 2017
இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பாவனைக்குதவாத ஒரு தொகை அரிசியினை ஹெட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வடுகம்-துந்திரிபிட்டிகம பிரதேசத்தில் உள்ள அரிசி களஞ்சியசாலை ஒன்றிலிருந்து வில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
69,525 கிலோ அரிசி இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இதன்போது சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹெட்டிபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீகஸ்வெவ – ஹலஹேனகம பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதானவர் என்றும், இவர் ஹெட்டிபொல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Related posts:
பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
சட்டவிரோத மதுபானத்தை கண்டறிய புதிய செயலி - இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!
போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் - ஜனாதிபதி ரணில் சந்திப்பு - ஜனாதிபதி நடைமுறைப்படுத்தியுள்ள வேலைத்...
|
|
|


