இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

நாட்டிற்கு வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளில் இந்தியாவிலிருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த மாதத்தின் முதல் 20 நாட்களில் மாத்திரம் 15 ஆயிரத்து 330 இந்திய சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு வருகைத்தந்துள்ள சுற்றுலாப்பயணிகளின் மொத்த எண்ணிக்கை 89ஆயிரத்து 724 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவிலிருந்து, 10 ஆயிரத்து 184 பேரும், சீனாவிலிருந்து 5 ஆயிரத்து 963 பிரஜைகளும் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளனர்.
மேலும், ஜேர்மனியில் இருந்து 5 ஆயிரத்து 141 பேரும், ரஷ்யாவில் இருந்து 4 ஆயிரத்து 561 சுற்றுலாப்பயணிகளும் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக 51 முறைப்பாடுகள்!
நாடு முழுவதும் சிவில் உடையில் பொலிஸார்!
புத்தாண்டின் முற்பகுதியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படு - அமைச்...
|
|
எச்சிலை வீதியில் துப்புவோருக்கு எதிராக கடுமையான சட்டம் - சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் ராஜபக்ஷ ...
தோழர் தவநாதனின் தாயார் உயிரழந்த செய்தி மனவேதனையை ஏற்படுத்துகின்றது – இரங்கல் செய்தியில் அமைச்சர் டக்...
2023 இல் 21 ஆயிரத்து 953 வீதி விபத்துக்கள் பதிவு - பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் தெரிவ...