இந்தியாவிலிருந்து மேலும் 40 தொன் ஒக்சிஜன் நாட்டை வந்தடைந்தது!
Monday, August 23rd, 2021
இந்தியாவிலிருந்து மேலும் 40 தொன் ஒக்சிஜனை ஏற்றிய கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
SLNS சக்தி என்ற இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பலே ஒக்சிஜனுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.
சென்னை துறைமுகத்திலிருந்து குறித்த கப்பல் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளது. கப்பலிலிருந்து ஒக்சிஜன் தாங்கிகளை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தியாவின் விசாகப்பட்டிணம் துறைமுகத்திலிருந்த ஒக்சிஜனை ஏற்றிய இந்திய கடற்படைக்கு சொந்தமான “ஷக்தி” கப்பல், கொழும்பு துறைமுகத்தை நேற்றையதினம் வந்தடைந்தது.
குறித்த கப்பலில் 100 தொன் ஒக்சிஜன் கொண்டுவரப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விடுதலையானார் கோத்தபாய ராஜபக்ச !
வெளிநாடுகளில் சிக்கியிருந்த இன்றும் 305 இலங்கையர்கள் நாடுதிரும்பினர்!
மார்ச்முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்படும் - கொரோனா தடுப்பு அமைச்சின் ஊடகச் செய...
|
|
|


