இந்தியாவிலிருந்து இலங்கைக்கான பயணிகள் விமான சேவைகள் இடைநிறுத்தம்!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கான பயணிகள் விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பைத் தொடர்ந்து உடன் அமுலுக்குவரும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம் P.A. ஜயகாந்த குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் குறித்த அதிகாரசபை இந்தியாவில் ஏற்பட்டுள்ள COVID 19 நிலைமை மற்றும் உள்நாட்டு சுகாதாரப் பிரிவின் பரிந்துரைகளுக்கமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம் P.A. ஜயகாந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தடைகள் வந்தாலும் சம்பூர் மின் நிலையம் அமைக்கப்படும்- அமைச்சர் சியாம்பலப்பிட்டிய!
பிரதான வைத்தியசாலைகளில் டெங்கு தீவிர சிகிச்சைப் பிரிவுகள்!
மின்சாரசபையின் கணக்கீடுகள் தவறானவை - கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்கப்போலதில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆ...
|
|