இந்தியாவிலிருந்து அரிசி இறக்குமதி !
 Thursday, August 31st, 2017
        
                    Thursday, August 31st, 2017
            
நாட்டில் அரிசியின் விலை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் மேலும் ஒரு மெட்ரிக் தொன் அரிசியை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்தது
70 ஆயிரம் மெட்ரிக் தொன் நாட்டரிசியும், 30 ஆயிரம் மெட்ரிக் தொன் சம்பா அரிசியும் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவிலுள்ள தனியார் துறையினரிடமிருந்து அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது.இறக்குமதி செய்யப்படும் அரிசியை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்தது.
Related posts:
டெல்டா ஆதிக்கம் செலுத்த தொடங்கினால் நிலைமை மோசமாகும்  - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!
காலாவதியான பொருட்கள்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தகர்கள் 20 பேரிற்கு ஐந்து இலட்சத்து 40,000/= ரூ...
விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்வதற்கு தேவையான பணம் இன்றுமுதல் அவர்களின் கணக்குகளில் வைப்பிலிடப்படு...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        