இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகரின் நியமனம் தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது – இந்திய தூதரகம் அறிவிப்பு!

இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள அசோக மிலிந்த மொரகொடவின் நியமனத்தினை இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என வெளியான செய்தியில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரக பேச்சாளர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக நியமனம் பெற்று புதுடில்லிக்கு சென்றுள்ள மிலிந்த மொரகொடவின் நியமனச்சான்றினை இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என சில தேசிய பத்திரிகைகள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.
இந்தநிலையிலேயே இந்திய உயர் ஸ்தானிகராலயம் அதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
30 சட்டத்தரணிகளை புதிதாக சேவையில் இணைக்க முயற்சி!
க.பொ.த உயர்தரம் பரீட்சையில் முல்லைத்தீவு மாவட்டம் இரண்டாவது இடம்!
தடுப்பூசியைப் பெறவில்லை என்றால், உடனடியாக தெரியப்படுத்துங்கள் – கல்விசார் ஊழியர்களுக்கு கல்வி அமைச்ச...
|
|