இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினம் இன்று – யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகத்திலும் விசேட நிகழ்வு!
 Wednesday, January 26th, 2022
        
                    Wednesday, January 26th, 2022
            
யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகத்தில் இந்தியாவின் 73 ஆவது குடியரசு தின நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
இன்று காலை நடைபெற்ற குறித்த நிகழ்வின்போது யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் பதில் துணைதூதுவர் ராம் மகேசினால் இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு இந்திய குடியரசுத் தலைவரின் சிறப்புரையும் யாழ்.இந்திய பதில் துணைத்தூதுவரால் வாசிக்கப்பட்டது.
அதன்பின்னர் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் சுகாதார நடைமுறை பின்பற்றி இடம்பெற்ற குடியரசு தின நிகழ்வில் மட்டுப்படுத்தப்பட்டளவில் விருந்தினர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கு விவகாரத்தில் நிதானம் அவசியம் - யாழ். ஆயர்!
முன்னணி அரச பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்க்க வரும் பெற்றோர்களிடம் நன்கொடைகளை வசூலிக்க வேண்டாம்  -  அரச...
உலகில் மிகவும் குறைந்த வரிகளைக் கொண்ட நாடாக இலங்கை – இதுவே பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய பங்காற்றி...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        