இந்தியாவின் யுபிஐ (UPI) தொழில்நுட்பம் இலங்கையில் ஆரம்பிக்கப்படும் – இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

இந்தியாவின் யுனிஃபைட் இன்டர்ஃபேஸ் பேமெண்ட்ஸ் (Unified Interface Payments) என்ற யுபிஐ (UPI) தொழில்நுட்பம் இலங்கையில் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்த பரிவர்த்தனை தொழில்நுட்பம் பெப்ரவரி 12ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் கையெழுத்திடும் நிகழ்வில் இரண்டு நாட்டு தலைவர்களும் இணையத்தின் ஊடாக இணைவார்கள் என்று தாம் நினைப்பதாக அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இந்த தொழில்நுட்ப அறிமுகம் சுற்றுலாவை மேம்படுத்த உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலையால் மின்சார உற்பத்தி பாதிப்பு!
நிர்ணய விலையில் அரிசியை விற்பனை செய்ய முடியாதென அறிவிப்பு!
நீதிபதி சரவணராஜா விவகாரம் - முழுமையான விசாரணையை முன்னெடுப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் 2...
|
|