இந்தியப் பிரதமர் இலங்கை விஜயம்!
Thursday, June 6th, 2019
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
அவரை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற இவர் கடந்த 30ஆம் திகதி இரண்டாவது பதவிக் காலத்திற்காக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து முதற் தடவையாக மாலைதீவு, இலங்கை ஆகிய நாடுகளுக்கு அவர் விஜயம் செய்கிறார். அயல் நாடுகளுடனான நட்புறவுக்கு உள்ள முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவது இந்த விஜயத்தின் நோக்கம் என இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
Related posts:
வடக்கு கல்வி அமைச்சின் செயலர் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
40 ஆயிரம் ஹெக்டயார் நிலப்பரப்பு தொடர்பில் வெளியாகிறது வர்த்தமானி – கையொப்பமிடப்பட்டுள்ளதாக வனஜீவராசி...
இலங்கைக்கு உதவுவதில் சாதகமான பங்காற்றுவதற்கு ஆற்றுவதற்கு, உலக நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் த...
|
|
|


