இணைய பணப்பரிமாற்ற சேவை – மக்களுக்கு இலங்கை வங்கி விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

Saturday, June 15th, 2024

இணையம் மூலமான வங்கி கொடுக்கல் வாங்கள் பரிவர்த்தனைகளுக்கு பூட்டு சின்னம் இல்லாத இணையதளங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு நீங்கள் எவ்வாறு தொடர வேண்டும் என்பது தொடர்பில் இலங்கை வங்கி விளக்கமளித்துள்ளது.

பூட்டு சின்னம் அல்லது https என்ற இணைய பயன்பாட்டு நெறிமுறை இல்லாமல் இணையதளங்களைப் பயன்படுத்தும் போது சைபர் ஊடுருவல் மூலம் உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களைத் திருடலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி இணையப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது பூட்டு சின்னம் உள்ள இணையதளங்களை மட்டும் பயன்படுத்துவதில் கவனமாக இருக்குமாறு இலங்கை வங்கி அறிவுறுத்தியுள்ளது.

மேலும், நிதி மோசடிக்கு சிக்காமல் கொடுக்கல் வாங்கல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

000

Related posts: