இணையவழி வர்த்தகத்திற்கும் வருகிறது புதிய சட்டம்!
Friday, March 16th, 2018
இலங்கையில் இணையவழி வர்த்தக நடவடிக்கைகளிற்கு புதிய சட்டங்களை அமுலாக்குவதற்கு இலங்கை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈகொமர்ஸ் எனப்படும் மின்வர்த்தகம் தொடர்பாக இலங்கையில் உள்ள சட்டத்திட்டங்களும், ஒழுங்குவிதிகளும் போதுமானதாக இல்லை.
இந்தநிலையில் இதற்கான புதிய ஒழுங்குவிதிகளையும், கட்டுப்பாடுகளையும் உருவாக்குவதற்காக, சர்வதேச வர்த்தக மையத்துடன் இணைந்து, இலங்கை நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கைகளை எடுக்கிறது.
இதற்காக கொழும்பில் இன்றும் நாளையும் முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாகவும், இதில் சர்வதேச வர்த்தக மையத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
பரீட்சை திணைக்களத்தில் மாற்றம்!
தேர்தலை நடத்துதல் தொடர்பான வழிமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி நாளை வெளியீடு!
கடன் மறுசீரமைப்பினால் வங்கிகளுக்கோ தனிநபர் வைப்புக்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது - நாடாளுமன்ற...
|
|
|


