இணையவழி மூலம் கட்டணங்களை செலுத்துங்கள் – தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கோரிக்கை!
Wednesday, September 1st, 2021
ஒன்லைன் முறையின் கீழ் கட்டணங்களை செலுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களை கேட்டுள்ளது.
அத்துடன் தகவல்களை 0112 62 36 23 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலமாக அறிந்துகொள்ள முடியும் என்றும் அச்சமையின் சபையின் பொது முகாமையாளர் திலின எஸ் விஜயதுங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய கொரோனா நிலைமையை கருத்தில்கொண்டு அத்தியாவசிய சேவையாக நீர் வழங்கல் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நெருக்கடிக்கு மத்தியிலும் அவசர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமது சபையின் பணியாளர்கள் தமக்குரிய பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றி வருவதாக அந்த சபையின் பொது முகாமையாளர் திலின எஸ் விஜயதுங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
அரச சொத்துக்களோ அல்லது வாகனங்களோ தேர்தல் விடயங்களுக்கப் பயன்படுத்தக்கூடாது - ஜனாதிபதி !
கல்வி பணிக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால் நியமனம்!
இலங்கையில் MTFE பிரமிட் திட்டத்தை தடை செய்ய நடவடிக்கை - இலங்கை மத்திய வங்கி தீர்மானம்!
|
|
|


