இணையத்தளம் ஊடாக மட்டுமே பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கலாம்!
Wednesday, September 21st, 2016
இணையத்தளம் ஊடாக மட்டுமே பல்கலைக்கழகத்திற்கு இம்முறை விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நேற்று (20) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் மொஹான் டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தபால் மூலம் பதிவு செய்து கொள்வதற்கு இம்முறை சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாணவர் கையேட்டிலும் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts:
மன்னிப்பு கேட்ட மார்க் ஜூக்கர்பெர்க்!
எந்த பாகுபாடும் இன்றி அனைவரும் இலங்கையர்களாக கருதியே சேவையாற்றுகின்றோம் – இராணுவத் தளபதி சவேந்திர சி...
ஆசிரியர்கள் மூலம் முதலாவது டெல்டா கொத்தணி உருவாகும் ஆபத்து - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன எச்சரிக்க...
|
|
|


