இடையூறு ஏற்படுத்தினால் சட்ட நடவடிக்கை – பிரதி பொலிஸ் மா அதிபர்!

பேரணியின் போது அம்பியுலன்ஸ் வண்டிகளுக்கும் பாடசாலை மாணவர்களின் நாளாந்த செயற்பாடுகளுக்கும் இடையூறு ஏற்படும் விதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாயின் அதற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமைதியான முறையில் தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பார்களாயின் இலங்கை பொலிஸாரின் பூரண ஒத்துழைப்பு அவர்களுக்கு வழங்கப்படும் எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.
மேலும் திட்டமிடப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்படும் விடயம் தொடர்பில் தமக்கு அறியக் கிடைத்ததாகவும் அது குறித்து நீதிமன்றத்திற்கு அறிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் குற்றவியல் நடவடிக்கையின் போது முன்னெடுக்கக்கூடிய செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|