இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை இணைத்தல் குறித்து கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தேசிய பாடசாலைகளில் 2 முதல் 4 மற்றும் 7 முதல் 10 வரையிலான இடைநிலை தரங்களுக்கு புதிதாக மாணவர்களை சேர்ப்பது குறித்து எதிர்வரும் 21 ஆம் திகதிக்குப் பிறகு தேசிய பாடசாலைகளுக்கு அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவரை தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான கடிதங்களை கல்வி அமைச்சு வழங்காது எனவும் குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
போட்டி மிகுந்த பொருள் ஏற்றுமதிக்கான சந்தர்ப்பம்!
தேர்தல் தொடர்பில் அடுத்த வாரம் அறிவிப்பு!
ஒட்டகப்புலத்தில் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகளை திறக்குமாறும், இணைந்த வீதிகளை பயன்படுத்த அனுமத...
|
|