இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!
Friday, June 28th, 2024
நாட்டின் கடனை மறுசீரமைக்க கடன் வழங்குநர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் மூலம் நாட்டின் பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்துள்ளமை உறுதியாகியுள்ளது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்
கம்பஹா மாவட்ட முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடன் உடுகம்பலையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது இதனைக் தெரிவித்துள்ளார்
இதேவேளை வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்க கடன் வழங்குபவர்கள் சம்மதிக்க வைத்தது நாட்டின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும் என்றும் தேவைக்கு ஏற்ப மீண்டும் சர்வதேச கடன்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்திருந்தார்
மேலும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிப்பதுடன் புதிய அபிவிருத்தி திட்டங்களையும் ஆரம்பிக்க வாய்ப்பு ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
மக்களின் வரிப்பணம் வீண் விரயம் செய்வதை ஏற்கமுடியாது : யாழ் மாநகர முதல்வருக்கு ஈ.பி.டி.பி. உறுப்பினர்...
யாழ்ப்பாணம் நடைபெற்ற தேர்தல் ஒத்திகை!
இனப்பிரச்சினைக்கு தீர்வு குறித்து மார்ச் மாதம் முக்கிய அறிவிப்பு வெளியாகும் - ஜனாதிபதி ரணில் விக்கிர...
|
|
|
இஸ்ரேல் தூதுவர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் விசேட சந்திப்பு – இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம், ...
அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு மேலும் ஒரு தொகுதி மருந்து மற்றும் மருத்துவ பொருட்கள் வழங்கி வைப்பு!
புதிய தேசிய பாதுகாப்பு சட்டமூலம் அடுத்தவாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் - நீதி அமைச்சர் விஜேய...


