இடமாற்றப்படும் பொலிஸ் பொறுப்பதிகாரிகள்!

Sunday, October 8th, 2017

பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் அதிருப்திக்கு உள்ளான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் 60 பேர்இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள்தொடர்பில் ஏற்கனவே தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு எதிராக பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசியல் தலையீடுகள் எதுவுமின்றிஇந்த இடமாற்ற உத்தரவுகள் செயற்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Related posts: