ஆஷூ மாரசிங்க பிரதி பிரதம கொறடா பதவியிலிருந்து இராஜிநாமா!
Saturday, March 30th, 2019
ஆளும் கட்சியின் பிரதி பிரதம கொறடா பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாரசிங்க இராஜிநாமா செய்துள்ளார்.
இதற்கான இராஜிநாமாக் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியுள்ள ஆஷூ மாரசிங்க, வரவு செலவுத்திட்டத்தின் சில ஒதுக்கீடுகள் தோற்கடிக்கப்பட்டதன் பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் சில ஒதுக்கீடுகள் தோற்கடிக்கப்பட்டதன் பொறுப்பு ஆளும் கட்சியின் பிரதம கொறடா, பிரதி பிரதம கொறடா மற்றும் உதவி பிரதம கொறடா ஆகிய மூவரிடமும் கையளிக்கப்பட்டுள்ளதாக ஆஷூ மாரசிங்க பிரதமருக்கு அனுப்பியுள்ள இராஜிநாமா கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொறுப்பின்மை, கவனயீனம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கு இயலாமை தொடர்பில் தாம் கவலையடைவதாகவும் அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
சுவசரிய சேவைக்கான App வசதி அறிமுகம்!
2020ஆம் ஆண்டு மதுபாவனைக்காக 20,000 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை இலங்கை மக்கள் செலவிட்டுள்ளனர் - ...
முச்சக்கர வண்டி ஒழுங்குமுறை தொடர்பான உத்தேச வரைவு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பிப்பு!
|
|
|


