ஆவாக்குழுவினைச் சேர்ந்த 5 பேர் வாள்களுடன் கைது!
Saturday, May 5th, 2018
சுன்னாகம் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையினால் ஆவாக்குழுவினைச் சேர்ந்த 5 பேர் வாள்களுடன் நேற்று இரவு (04) கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் கைதடி மற்றும் நுணாவில், வவுனியா பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 4 வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சுன்னாகம் பகுதியில் வாள் வெட்டினை மேற்கொள்வதற்கு எத்தணித்த போதே பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சுன்னாகம் பொலிஸார் அதிரடியாக இறங்கி குறித்த ஐவரையும் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் பல வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும், கைதுசெய்யப்பட்டவர்களை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Related posts:
குடாநாட்டில் சிறுவர் வன்முறை 8 சதவீதத்தினால் அதிகரிப்பு - யாழ்.அரச அதிபர் தகவல்!
உயர்தரப் பரீட்சையில் 6468 மாணவ மாணவியர் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி!
இலங்கை கடந்த காலங்களில் மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டது – இந்த கடினமான சவாலையும் வெற்றிகொள்ளும் - ...
|
|
|


