ஆழிப்பேரலையின் வலிகளை நினைவுகூரும் நிகழ்வுகள் நாளை !

Sunday, December 25th, 2016

நாளை ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தின் 12ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு தினம் ஆகும்.

யாழ்ப்பாணத்தில் வடமராட்சி உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் நினைவுகூரும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

2004ம் ஆண்டு ஆழிப்பேரலை கோரத்தாண்டவம் ஆடியது. இதனால் வடக்கு மாகாணத்தில் மாத்திரம் ஐந்தாயிரத்திற்கும் மேற்ப்பட்ட பொது மக்கள் பலியானார்கள். அத்துடன் ஆயிரக்கணக்கான மக்கள் காயங்களுக்கு உள்ளானர்கள். பல ஆயிரம் மக்கள் தங்களுடைய சொத்துக்கள் உடமைகளை இழந்து நிர்க்கதிக்கு தள்ளப்பட்டார்கள்.

இதனை நினைவு கூறும் முகமாக நினைவேந்தல் நிகழ்வினை கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள், கடற்தொழிலாளர் சங்கங்களை சார்ந்த அங்கத்தவர்கள், நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள், எனப்பலர் இணைந்து நடத்த உள்ளனர். இதேவேளை நாளைய தினம் இறைவணக்க வழிபாடுகளும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைகளும் இடம் பெறவுள்ளன.

625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts:

சந்தர்ப்பவாத தலைமைகளை விரட்டியடிக்க ஒற்றுமையுடன் முன்வாருங்கள் - தோழர் மாட்டின் ஜெயா தெரிவிப்பு!
ஓ நெகடிவ் குருதிக்கு யாழ்ப்பாணத்தில் பெரும் தட்டுப்பாடு! குருதிக் கொடையாளர்களே உங்களின் கவனத்திற்கு!
கடும் காற்று : திருகோணமலை மாவட்டத்தில் 18 வீடுகள் சேதம் - மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவ...