ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 18 வது ஆண்டு நினைவு நாள் இன்று – நாடு முழுவது அஞ்சலிப்பு!

Monday, December 26th, 2022


சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 18 வது ஆண்டு நினைவு நாள் இன்று யாழ்ப்பாணம் வடமராட்சியில் அவர்களது உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டது.

உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினுடைய ஏற்பாட்டில் இன்று காலை வடமராட்சி உடுத்துறை நினைவாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பலரும் தமது உறவுகளை அஞ்சலித்தனர்.

சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வு ஆரமிக்கப்பட்டது.
இதன்போது ஈழமக்கள் ஜனனாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக  பொறுப்பாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்  உள்ளிட்ட பலதரப்பினரும் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மாலையிட்டு தீபங்கள் ஏற்றி உணவுகளை படையலிட்டு உறவுகள் அஞ்சலித்தனர்.

கடந்த 2004 டிசம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை பேரனர்த்தம் காரணமாக பல்லாயிரம் பொதுமக்கள் உயிரிழந்ததுடன் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் அழிந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:


தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட இலங்கையர்களுக்கு கட்டார் மற்றும் சவுதி அரேபியா விடுத்துள்ள அறிவிப்பு!
13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இன்று பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதும் ...
அனைத்து சவால்களையும் முறியடித்து 2048 ஆம் ஆண்டளவில் வளர்ந்த இலங்கையை கட்டியெழுப்ப அனைத்து இலங்கை முஸ...