ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்ற நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு!
Wednesday, January 6th, 2021
ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிகிச்சை மத்திய நிலையங்களாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுதேச வைத்திய மேம்பாடு மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாவின்ன ஆயுர்வேத வைத்தியசாலையை கேந்திரமாக கொண்டு அதன் முதற்கட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சுதேச வைத்திய மேம்பாடு மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்காக தாம் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர், இதற்காக சுகாதார அமைச்சு மற்றும் ஏனைய பிரிவுகளின் உதவியினை பெற்று வேறுபட்ட முறைக்கு சிகிச்சை அளிக்கை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொது தேர்தல் தொடர்பில் நாளை விசேட கலந்துரையாடல்!
பயன்படுத்தி விட்டு அகற்றப்படும் முகக் கவசங்களை வீதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் வீச வேண்டாம் - மீறின...
நாடு முழுவதும் 4 மில்லியன் பேர் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக பதிவு செய்துள்ளனர் - யூ.ஆர் ...
|
|
|


