ஆயுதப் பாசறையில் ஒன்றாக இருந்த நாம் மீண்டும் அரசியல் பாசறையில் ஒன்றிணைந்துள்ளோம் – கன்னி உரையில் ஜெகன்!

Wednesday, April 11th, 2018

ஆரம்ப காலங்களில் ஒரே பாசறையில் ஆயுதப் போராளிகளாக இருந்த நாம் இன்று மீண்டும் அரசியல் போராளிகளாக  பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த அவையில் மீண்டும் ஒன்றுகூடியிருப்பதானது காலம் எம்மை மீண்டும் ஒரே கோட்டில் பயணிக்க வைத்துள்ளது என்றே உணரமுடிகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினரும் கட்சியின் மாவட்ட நிர்வாக செயலாளருமான கா. வேலும்மயிலும் குகேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகரசபையின் புதிய ஆட்சிக்கான கன்னி அமர்வு இன்றையதினம் முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் கூடியது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

தமிழர் உரிமைக்காக ஆரம்பகாலங்களில் போராட்டங்களை முன்னெடுத்த அமைப்புகளின் போராளிகள் அதிகமானவர்கள் ஒரே பாசறைகளில் இருந்துதான் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். ஆனால் காலம் அதை திசைமாற செய்ததனால் இன்று  ஆயுதவழிப் போராட்டம் திசைமாறிவிட்டது. எனினும் இன்று அரசியல் போராளிகளாக நாம் அனைவரும் பல கட்சிகள் என்ற போர்வையில் ஒன்றிணைந்துள்ளோம். இது காலம் எமக்கு இட்டுள்ள மற்றுமொரு சந்தர்ப்பம்.

இந்த சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் பேதங்களை மறந்து மக்களின் நலன்களுக்காக உழைக்கவேண்டும்.  அதற்கான களமாக இந்த சபையை நாம் பயன்படுத்த வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: