ஆண்டு இறுதிக்குள் 280 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி – இலக்கை அடைய முடியும் என ஏற்றுமதியாளர் சங்கம் நம்பிக்கை!

Tuesday, November 9th, 2021

தேயிலை தொழில்துறை இந்த ஆண்டு இறுதிக்குள் 1.3 பில்லியன் டொலர் என்ற நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்கை அடைய முடியும் என தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அத்துடன் 280 மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தி என்ற இலக்கையும் அடைய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு உள்ளக மற்றும் வெளியக சவால்களுக்கு மத்தியில் இந்த இலக்கை அடைய தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அண்மையில் காணொளி தொழில்நுட்பம் மூலம் இடம்பெற்ற 22 ஆவது வருடாந்த பொதுக்கூட்டத்தில், சங்கத்தின் தலைவர் சஞ்ஜய ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேயிலை ஏற்றுமதியை குறுகிய காலத்தில் இருந்து மத்திய காலம் வரையில் 2 பில்லியன் டொலராக அதிகரிப்பதற்கு, அரசாங்கத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ளாமல், தங்களால் இயன்றதை செய்வதற்கு தேயிலை உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

அத்துடன் தேயிலை செய்கையாளர்கள், உற்பத்தியாளர்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களின் ஒத்துழைப்பு இதற்கு அவசியமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: