ஆண்களுக்கு மசாஜ் கடமைகளில் ஆண்கள் மட்டுமே ஈடுபடும் வகையில் சட்டம் உருவாக்கப்படும் – ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தம்மிக்க அபேகுணவர்தன அறிவிப்பு!
Tuesday, January 17th, 2023
இலங்கையில் ஆண்களுக்கு மசாஜ் கடமைகளில் ஆண்கள் மட்டுமே ஈடுபடும் வகையில் சட்டம் உருவாக்கப்படும் என ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தம்மிக்க அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
மசாஜ் சென்டர்கள் மூலம் எய்ட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்கள் பரவலாக பரவி வருவதால் இந்த சட்டம் இயற்றப்படுவதாக ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.
மசாஜ் மையங்கள் ஆயுர்வேத திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர் கட்டாயமாக இருக்க வேண்டும்.
மேலும், மசாஜ் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஊழியர்கள் தொழில்சார் அறிவு மற்றும் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்
000
Related posts:
பொலிஸார் தொடர்பாக முறைபாடுகள் தெரிவிக்க அழையுங்கள்!
பொலிஸாருக்கு கஞ்சா விற்ற நபர் கைது!
கடவுச்சீட்டை பெற நாள் ஒன்றுக்கு 3, ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் - குடிவரவு மற்றும் குடியகல்வ...
|
|
|


